11/02/2014

Battery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா ?



நம் பகுதிக்கு வரும் அதிக பிரச்சினைகளில் இரண்டாவது இடம் வகிப்பது battery power lose 
அதாவது பேட்டரி தனது மின் சக்தியை அதிவேகத்தில் இழப்பது

இதற்காக நமது போனில் battery doctor மற்றும் battery saver போன்ற applicationகளை நிறுவி வைத்திருப்போம் ஆனால் அவை இயங்குவதற்க்கு மட்டும் பேட்டரியின் பங்கு எவ்வளவு தெரியுமா ஒரு நாளைக்கு 20 சதவிகிதம் ஆம் அது ஒரு நாள் உங்களின் மொபைலில் இயங்க உங்களது போனின் முழு மின் சக்தியிலிருந்து 20 சதவிகிதத்தை அது இயங்குவதற்காக எடுத்து கொள்வது மட்டும் இல்லாமல் ram memoryஇல் தனக்காக ஒரு இடத்தை ஆக்கிரமித்து மொபைலின் வேகத்திற்கு முடுக்காகவும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று

battery saverகள் உங்களது போனில் என்னென்ன வேலைகளை செய்கிறது ?
brightnessஐ குறைக்கிறது media volume, ringtone volume, touch volume, keytone, vibration என அனைத்தையும் நிறுத்துகிறது அல்லது குறத்து விடுகிறது

இந்த வேலைகள் அனைத்தையும் நாமே நமது மொபைல்களில் மேற்கொள்வதன் மூலம் இது போன்ற தேவை இல்லாத applicationகளை மொபைலில் இருந்து நீக்கி battery powerஐ சேமிப்பதன் மூலம் மொபைலின் வேகத்தையும் சிறிது அதிகப்படுத்தலாம்

BATTERY POWER ஐ சேமிக்க என்னென்ன செய்ய வேண்டும் ?
1. உங்களது போனில் அதிக மின்சக்தியை எடுப்பதில் இரண்டாவது பங்கு வகிப்பது display அதற்காக displayஐ அணைத்தே வைக்கவா முடியும் என்று நீங்கள் கூறுவது புரிகிறது அதை அனைக்க வேண்டாம் உங்கள் சூழலுக்கு ஏற்ப DISPLAYன் BRIGHTNESSஐ குறைத்து கொள்ளுங்கள்

2. அதிக மென்பொருட்கள் அதாவது Applicationகளை உங்களது போனில் வைப்பதை குறைத்து கொள்ளுங்கள் அதிக applicationகளை ஒரே நேரத்தில் உங்களது போனில் இயக்குவதையும் நிறுத்தி கொள்ளுங்கள் ஏனெனில் ஒரு application உங்களது மொபைலில் இயங்க ஆரம்பித்து விட்டது என்றால் battery என்கிற பலூனில் ஒரு ஓட்டை விழுந்துவிட்டது என்று அர்த்தம் அந்த ஓட்டையின் அளவு அந்த application அளவை பொறுத்தது

3. touch tone, keyboard tone,touch vibration, ஆகியவற்றை அடியோடு நிறுத்தி விடுங்கள்
4. தேவை இல்லாத நேரங்களில் இண்டெர்நெட்டை நிறுத்தி வையுங்கள்

5. தேவைப்படும்போது மட்டும் WIFI, BLUETOOTH, GPS ஆகியவற்றை On செய்து உபயோகியுங்கள்


மேற்கண்ட அனைத்து முறைகளையும் உங்களது போனில் கடைபிடித்தாலே போதும் மின்சக்தி அதிகளவு சேமிக்கபடுவதை உங்களால் உணர முடியும்

இனி இது போன்ற Applicationகளிடம் இருந்து உங்களது மொபைலை காத்துக்கொள்வதும் கூடாததும் உங்களது கையில்

விருப்பப்பட்டால் SHARE செய்யுங்கள் நமது pageன் வளர்ச்சிக்காக
நன்றி
posted by
Aashy

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).