22/02/2014

மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில்  விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?

பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான்  அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத   உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை  திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி  இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன


சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்
Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்


இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல்
Total அதே 41.26Mb
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்
  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb
அதின் உபயோக அளவு 432மMb
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின் அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 

கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று

  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 


அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 

  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும் 


இதில் எதாவது சந்தேகம் இருப்பின் FACEBOOK COMMENT பதிவிடலாம்

PLEASE SHARE THIS USEFUL INFORMATION TO YOUR FRIENDSPosted by
Your Loveble
Aashy 

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).